உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடன் வாங்கி தருவதாக ஏமாற்றியவர் கைது

கடன் வாங்கி தருவதாக ஏமாற்றியவர் கைது

சாணார்பட்டி : சாணார்பட்டி தவசிமடையச் சேர்ந்தவர் ஜோசப் 44. இவர் திண்டுக்கல்லில் டீக்கடை நடத்துகிறார். இவருக்கு அறிமுகமான கூ. குரும்பட்டியைச் சேர்ந்த ஆசைத்தம்பி 60,என்பவர். தனக்குத் தெரிந்த நிதி நிறுவனம்,வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன் 2 தவணையாக ரூ.1.50 லட்சம் வாங்கினார். பிறகு கடன் வாங்கி தர எந்த முயற்சியும் செய்யாமல் இருந்ததால் ஜோசப், ஆசைதம்பியிடம் இது பற்றி கேட்டதற்கு ஆசைத்தம்பி பணம் திருப்பி தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் ஜோசப் சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன்.குணசேகரன் ஆசைத்தம்பியை கைது செய்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ