உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது

பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் உயர்ரக மோட்டார் பைக் வாங்கும் ஆசையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி செல்வி 50. மதுரை ரோட்டில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த இளைஞர் பாண்டி செல்வியின் கழுத்தில் கிடந்த ஒன்பது பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி ஓட முயன்றார். சங்கிலி அணிந்திருந்த பெண் கூச்சலிட்டு, சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்தார். ஆள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி 21 என்பதும், உயர் ரக மோட்டார் பைக் வாங்க ஆசைப்பட்டு, பணத்திற்காக சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை