உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் திருடிய நபர் கைது

டூவீலர் திருடிய நபர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திண்டுக்கல் நகர்ப் பகுதியில் தொடர்ச்சியாக டூவீலர்கள் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளியைப் பிடிக்க வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் நடத்திய வத்தலகுண்டு தெற்குத் தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 35 என்பவர் டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டது சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் தெரியவந்தது. திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சூரியபிரகாஷை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ