மன்னார்குடி வாலிபர் கொடை விபத்தில் பலி
கொடைக்கானல்:கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த மன்னார்குடி வாலிபர் பலியானார்.மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராகேஷ் 27, பிரேம்குமார், விஜய், வெங்கடேஷ், சூர்யா. நண்பர்களான இவர்கள் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். பள்ளங்கி கோம்பையில் உள்ள விடுதியில் தங்கியவர்கள் கார், டூவீலரில் வெளியே சென்றனர். காரை பிரேம்குமார் ஓட்டிய நிலையில் அதில் சூர்யா, வெங்கடேஷ் இருந்தனர். முன்னால் சென்ற டூவீலரில் ராகேஷ் ,விஜய் சென்றனர். பள்ளங்கி அருகே சென்ற போது பிரேக் பழுதாக கட்டுப்பாட்டை இழந்த கார் டூவீலர் மீது மோதி கவிழ்ந்தது. டூவீலரில் சென்ற ராகேஷ் 27, பலியானார். மற்றவர்கள் காயத்துடன் தப்பினர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.