மேலும் செய்திகள்
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லை-
07-Sep-2025
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆலமரத்தின் வேர்களாக இருந்து பலரும் உதவி செய்தார்கள் என நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், இலக்கிய களம் சார்பில் 12 -வது புத்தக திருவிழா, திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் 11 நாட்கள் நடந்தது. நேற்று நடந்த இறுதிநாள் புத்தக திருவிழாவுக்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசியதாவது, 'மாவட்டத்தின் வளர்ச்சி எல்லோரின் ஒத்துழைப்பால் தான் சாத்தியமாகும். அந்த வகையில் 12-வது புத்தக திருவிழா அனைத்து துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் தான் மிகப்பெரிய வெற்றியடைய சாத்தியமாகியுள்ளது. ஆலமரத்தை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் வேரினை யாரும் பார்த்திருக்க முடியாது. அதுபோல வேர்களாக இருந்து இந்த புத்தக திருவிழாவிற்கு பலரும் உதவி செய்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு நிறைய புதிய முயற்சிகளை கையில் எடுத்தோம். சேமிப்பு உண்டியல், மராத்தான் ஓட்டம், திண்டுக்கல் வாசிக்கிறது, டியர் டிராப் நிகழ்ச்சி உள்பட எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றையும் வெற்றிக் கனிகளாக மாற்றியதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் பங்கேற்ற முதல் புத்தக திருவிழாவாக இது பதிவாகி உள்ளது' என்றார். டி.ஆர்.ஓ. ஜெயபாரதி, திட்ட இயக்குனர் திலகவதி, பயிற்சி கலெக்டர் வினோதினி, இலக்கியக்களம் தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Sep-2025