மேலும் செய்திகள்
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
05-Jan-2026
கன்னிவாடி: வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயில் குருபூஜையில், ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். தருமத்துப்பட்டி அருகே வெல்லம்பட்டியில் மாரிமுத்து சித்தர் கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான மார்கழி பூனர்பூச நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முன்னதாக காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள், பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று, தீர்த்தவாரியுடன், யாகசாலை பூஜை நடந்தது. திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன் குருபூஜை நடந்தது. அன்னதானம், வஸ்திர, சொர்ண தானம் நடந்தது.
05-Jan-2026