உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தியாகிகளுக்கு வீரவணக்க நாள்

தியாகிகளுக்கு வீரவணக்க நாள்

வேடசந்துார்: வேடசந்துாரில் 1978 ல் நடந்த மின் கட்டண உயர்வுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் விவசாயிகள் நாச்சிமுத்து, சுப்பிரமணி, சின்னசாமி, கருப்புசாமி, மாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி என 6 பேர் இறந்தனர். இவர்களின் நினைவாக விவசாயிகள் சங்க கட்டடத்தில் உள்ள நினைவு ஸ்துாபியில் வேடசந்துார் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கருப்புசாமி பொருளாளர் செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் குப்புசாமி, ரமேஷ், குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி பங்கேற்றனர். தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் நடராஜன் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அனைத்து இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ