உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிறிஸ்தவ சர்ச்களில் பெரிய வியாழன்

கிறிஸ்தவ சர்ச்களில் பெரிய வியாழன்

திண்டுக்கல்: பெரிய வியாழனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கிறிஸ்தவ சர்ச்களில் பாதம் கழுவும் சடங்கு நடந்தது.ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் பிப்ரவரி 17-ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. 28 ம் தேதி குருத்தோலை கொண்டாடப்பட்டது. அதுமுதல் ஈஸ்டர் பண்டிகை வரையிலான காலம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி தூய்மைப்படுத்தியதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு சர்ச்சிலும் பாதிரியார்கள் 12 பேரின் பாதங்களை கழுவி சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி கத்தோலிக்க சர்ச்களில் பெரிய வியாழனான நேற்று நடந்தது.புனித வளனார் சர்ச்சில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திருப்பலி நடந்ததை தொடர்ந்து பாதம் கழுவும் சடங்கு நடந்தது. இதேபோல் மேட்டுப்பட்டி சர்ச்சில் பாதிரியார் செல்வராஜ் தலைமையிலும் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை