மேலும் செய்திகள்
தொண்டி பஸ் ஸ்டாண்டில் வெயிலில் தவிக்கும் பயணிகள்
19-Jul-2025
அத்துமீறும் தருணம்; கரணம் தப்பினால் மரணம்!
31-Jul-2025
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள மயிலாடும்பாறை வனத்துறை சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மயிலாடும்பாறையில் வனத்துறை உயர் கோபுரம் அமைத்து இங்குள்ள மலை முகடுகளின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. பயணிகள் இளைப்பாற இருக்கைகளுடன் பூங்காவையும் பராமரித்தனர். சுற்றுலா பயணிகளும் இவ்விடத்தில் இறங்கி ஓய்வுக்கு பின் கொடைக்கானல் சென்றனர். பழங்குடியினர் பயனடையும் வகையில் வனத்துறையினர் கடைகள் நடந்த அனுமதித்தனர். இவை சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க ஆய்வும் நடந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன் வனத்துறை முன்னறிவிப்பின்றி இந்த மையத்தை மூடியது. வனப்பகுதியின் அழகை கண்டு ரசிக்கவும், இளைப்பாறவும் முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மயிலாடும்பாறை வனத்துறை சுற்றுலா மையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கொரோனா காலகட்டத்திற்கு பின் இச்சுற்றுலாத்தலம் மூடப்பட்டது. உயர் கோபுர கூரைகள் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. புனரமைப்பு செய்து பயணிகள் வசதிக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பூட்டப்பட்டுள்ளது,'' என்றார்.
19-Jul-2025
31-Jul-2025