குப்பை கிடங்கில் இறைச்சி கழிவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் இறைச்சி கழிவை கொட்டிய மினி வேன் மக்கள் போராட்டத்தால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாநகராட் பகுதி குப்பை தரம் பிரிக்கப்பட்டு பழநி ரோட்டில் உள்ள முருகபவனம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. மாநகரில் சேகரமாகும் இறைச்சிக் கழிவுகள், தனியார் நிறுவனம் மூலம் சேகரிக்கப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டு விலங்கு உணவாக மாற்றப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் இறைச்சிக் கழிவுகளை முருகபவனம் குப்பை கிடங்கில் மினிவேனில் கொண்டு வந்து கொட்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் மினிவேனை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை மாநகர நல அலுவலர் ராம்குமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் , ஊழியர்கள் குப்பை கிடங்கிற்கு சென்று இறைச்சி கழிவுகளை கொட்டிய மினி வேனை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதை கவனிக்காத குப்பை கிடங்கு தனியார் ஒப்பந்த மேற்பார்வையாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதோடு காவலாளி மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.