ரோட்டில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளால் நோய் அபாயம்
சாலையில் தேங்கும் மழை நீர் எரியோடு குளத்துார் ரோட்டில் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் சீரமைப்பு செய்யவேண்டும். ---நடராஜன், எரியோடு. -நோய் பரவும் அபாயம் திண்டுக்கல் கக்கன் நகர் ரயில்வே காலனி ரோட்டில் மருத்துவகழிவு ,கோழிக் கழிவுகள், உணவுகழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். வீரப்பன், திண்டுக்கல்............ சாக்கடை இன்றி அவதி திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டி கிரீன் சிட்டி பகுதியில் சாக்கடை இல்லாமலும், மழைநீர் செல்ல வழியில்லாமலும் உள்ளதால் பொதுமக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர். சிவக்குமார், நொச்சிஓடைப்பட்டி. ......-------- வீணாகும் குடிநீர் செம்பட்டி - பழநி ரோடு பெட்ரோல் பங்க் அருகே குடிநீர் பைப் லைன் உடைந்து ஒரு மாதமாய் தண்ணீர் ஓடுவதால் பெரிய பள்ளம் உள்ளது .இதுபோல் செம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகேயும்இதே நிலை உள்ளது .முருகன், செம்பட்டி.............---------- சாக்கடை இன்றி கழிவுநீர் தேக்கம் வேம்பார்பட்டி அரசு தொடக்கப்பள்ளி செல்லும் ரோட்டில் சாக்கடை இல்லாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை கருதி சாக்கடை அமைக்க வேண்டும். பிச்சால், வேம்பார்பட்டி....................---------- மழைநீர் ஓடையில் கழிவுகள் திண்டுக்கல் மாநகராட்சி ரெங்கநாயகி நகர் பகுதிகளில் பல மாதங்களாக குப்பையை அள்ளாமல் துர்நாற்றம் வீசும் நிலையில் மழைநீர் செல்லும் ஓடையிலும் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. துரை கணேசன் , திண்டுக்கல். .........---------- திறந்த நிலையில் சாக்கடை புதுச்சத்திரம் பொம்மநல்லுார் கம்பளிநாயக்கன்பட்டி ரோட்டில் சாக்கடை திறந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. .இங்கு மூடி அமைத்து தர வேண்டும் கி. ரங்கசாமி பொம்மநல்லுார். ...........-----------