வணிகர் சங்க செயற்குழு கூட்டம்
கொடைக்கானல்: கொடைக்கானலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 42 வது மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் நடந்தது. மண்டல தலைவர் கிருபாகரன், வணிகர் சங்க பழநி தலைவர் ஜே. பி. சரவணன், நகர தலைவர் காஜா முகமது, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு ,மாநில பொருளாளர் சதக்கத்துல்லா கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர பொருளாளர் பாலசுப்பிரமணி நிதியாண்டு வரவு செலவுகளை தாக்கல் செய்தார்.