பழநி: எம்.ஜி.ஆர்., நினைவு நாளை முன்னிட்டு பழநி பெரியப்பா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவிமனோகரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய செயலாளர்கள் முத்துச்சாமி, அ.தி.மு.க.,நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர் . சின்னாளபட்டி: சித்தையன்கோட்டையில் மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமை வகித்தார். மாவட்ட மீனவரணி இணை செயலாளர் வக்கம்பட்டி அந்தோணி, பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், செவனக்கரையான்பட்டி, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, செம்மடைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாச்சலம், நகர செயலாளர்கள் கன்னிவாடி முருகன், ஸ்ரீராமபுரம் விஜயகுமார், கன்னிவாடி அவை தலைவர் சதாம்உசேன், மாவட்ட மாணவரணி நிர்வாகி சிவராம்குமார், மீனவரணி இணை செயலாளர் சின்னையா, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி மகேந்திரன் பங்கேற்றனர். கோபால்பட்டி: சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க., சார்பாக எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இளம்வழுதி, வர்த்தக அணி செயலாளர் கிரசர் பாலு, பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் கோபால்பட்டி விஜயன், சேகர், சிறுபான்மையினர் அணி அந்தோணி, எம்.ஜி.ஆர், அணி சின்னச்சாமி கலந்து கொண்டனர்.