மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
திண்டுக்கல் : முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., ன் 37 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு , மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அமைப்புச் செயலாளர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ் மோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பிரேம்குமார், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், இளைஞரணி செயலாளர் ராஜன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், இணை செயலாளர் பழனிச்சாமி, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஆவின் சேர்மன் திவான் பாட்சா, மதுரை மண்டல ஐ.டி.விங்க் துணைத்தலைவர் வீரமார்பன், மருத்துவர் அணி செயலாளர் ராஜசேகரன், ,கலை தலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றம், தமிழக வெற்றிக்கழகம் ,பொதுமக்கள் என பல தரப்பினரும் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். காத்திருந்த த.வெ.க.,
எம்.ஜி.ஆர்., சிலையருகே அ.தி.மு.க., நிர்வாகிகள் அனைவரும் குவிந்திருந்த நிலையில் முக்கிய நிர்வாகிகள் வரததால் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மால அணிவிக்க வந்தனர். அப்போது அ.தி.மு.க., வினர் நாங்கள் சென்ற பிறகு மாலை அணிவிக்குமாறு கூறினர். அதனை ஏற்ற த.வெ.க., வினர் அ.தி.மு.க., வினர் கலைந்து செல்லும் வரை காத்திருந்தனர்.கோபால்பட்டி : கோபால்பட்டி பஸ் ஸ்டாண்டில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாநில ஜெ பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் கே.சுப்பிரமணி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலாளர்கள் இளம்வழுதி, கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் ஹரிகரன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் ஆண்டிச்சாமி, சின்னச்சாமி, ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், குணசேகரன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ்பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜி.டி.அந்தோணி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர்கள் சக்திவேல், செல்வம், மகேந்திரன், சீனிவாசன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொன் மணிகண்டன், ஒ இணைச்செயலாளர் முகமது பாரூக், தகவல் பிரிவு செயலாளர் சந்திர போஸ், கிளைச் செயலாளர்கள் ராஜசேகர், சுந்தரம், கிருஷ்ணசாமி, பாசறை துணைத் தலைவர் முருகன், அழகர்சாமி, மீனவர் அணி மதுரை வீரன் கலந்து கொண்டனர். நத்தத்திலும் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் : பஸ் ஸ்டாண்ட் முன்பு நகர செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அப்பன் கருப்புசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் எஸ்.செல்வராஜ், சண்முகவேல், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.பி. வி. மனோகரன், இளைஞரணி துணைச் செயலாளர் தவமணி, வழக்கறிஞர் பிரிவு சுப்பிரமணி, தகவல் பிரிவு துணைத் தலைவர் சீரா பாலா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வீரமணிகண்டன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், மீனவரணி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கலந்து கொண்டனர்.திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.ம.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் கேபி.நல்லசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே.சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.காளியப்பன், மகளிர் அணி துணைத் தலைவர் எஸ்.வெள்ளத்தாய், ஒன்றிய செயலாளர் சிவராஜ், நகர அவைத்தலைவர் செல்வம், விவசாய அணி செயலாளர் செல்லத்துரை, நகரப் பொருளாளர் ராமமூர்த்தி, விவசாய அணி தங்கவேல், ம ட சுற்றுச்சூழல் பிரிவு விஜயகுமார், இளைஞர் பாசறை ச ஜீவானந்தம், தகவல் பிரிவு ஸ்ரீராம் கலந்து கொண்டனர்.வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் மாநில இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஐ.டி.,பிரிவு மதுரை மண்டல தலைவர் கோகுல்கவுதம், விவசாய அணி ராஜமோகன், இணை செயலாளர் செல்லபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் மலையாண்டி, அய்யலுார் பாசறை நகர செயலாளர் யுவராஜா, ஐ.டி.,பிரிவு ச செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகர் பங்கேற்றனர்.
06-Dec-2024