உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறுவட்ட கூடை பந்தாட்ட போட்டி

குறுவட்ட கூடை பந்தாட்ட போட்டி

வத்தலக்குண்டு: 'உ' பிரிவு குறுவட்ட போட்டிகளை சிலுக்குவார்பட்டி விவேகானந்தா பள்ளி நடத்தி வருகிறது. வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் 15 பள்ளிகளுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 17 வயது பிரிவில் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னை வேளாங்கண்ணி பள்ளியை 38:26 புள்ளிகளில் வென்றது. 19 வயது பிரிவில் அதே அணியினர் 41:29 வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். உடற்கல்வி இயக்குனர் சகாயமேரி ராணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தீபா, உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், யங்ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் போஸ் துவக்கி வைத்தனர்.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்டாலின் பிரபு, நிர்மல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ