உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அனைத்து தொகுதிகளும் சீரான வளர்ச்சி அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

அனைத்து தொகுதிகளும் சீரான வளர்ச்சி அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

கள்ளிமந்தையம்: தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்'' என அமைச்சர் சக்கரபாணி பேசினார் கள்ளிமந்தையத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி மதம் இனம் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார். ஆர்.டி.ஒ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, டி.டி.ஓ.,க்கள் குமரன், தாஹிரா, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், பி.சி.தங்கம் பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கணேசன், ராஜேஷ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ