உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ 1.05 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டிய அமைச்சர் சக்கரபாணி

ரூ 1.05 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டிய அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ 1.05 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். ஒட்டன்சத்திரத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி , ரூ.69.62 லட்சம் மதிப்பீட்டில் பெரிய கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் கழிப்பறை கட்டும் பணிக்கு அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். மேலும் அரசப்ப பிள்ளை பட்டி ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் பாலு, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை