உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மகளிர் உரிமை திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயன் அமைச்சர் பெரியசாமி பேச்சு

மகளிர் உரிமை திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயன் அமைச்சர் பெரியசாமி பேச்சு

திண்டுக்கல் : ''மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர்''என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பேசினார்.திண்டுக்கல் சிறுமலை ஊராட்சியில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாக ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கிறது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர். 100 நாள் வேலை நாட்கள்,ஊதியத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.சுயஉதவிக்குழுவிற்கு சழுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டது. திட்ட இயக்குநர்கள் திலகவதி, சதீஸ்பாபு, ஆர்.டி.ஓ.,சக்திவேல்,சிறுமலை ஊராட்சி தலைவர் சங்கீதா வெள்ளிமலை,துணை தலைவர் வெற்றிவேல்,ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் ,தி.மு.க.,தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை,தி.மு.க.,சார்பு அணி நிர்வாகிகள் கண்ணன்,அக்பர்,முருகானந்தம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ