மாணவரை பாராட்டிய அமைச்சர்
ஒட்டன்சத்திரம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சி.மணிஷ் குமார் 500க்கு 498 மதிப்பெண் பெற்றார். பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 100 ,கணிதம் 100 ,அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ் 2 பொது தேர்வில் இதே பள்ளி மாணவன் எஸ். ஹரிஹரன் 600 க்கு 596 மதிப்பெண் பெற்றார். மாணவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பாராட்டினார். இது போல் பள்ளி தாளாளர் திருப்பதி, செயலாளர்கள் மீனா, சுரேஷ், கண்ணன், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.