உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நிலக்கோட்டை தி.மு.க., கோட்டையாகும் எம்.எல்.ஏ., செந்தில்குமார் உறுதி

நிலக்கோட்டை தி.மு.க., கோட்டையாகும் எம்.எல்.ஏ., செந்தில்குமார் உறுதி

வத்தலக்குண்டு: ''நிலக்கோட்டை தி.மு.க.,வின் கோட்டையாகும்''என கிழக்கு மாவட்ட செயலாளரான செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.வத்தலக்குண்டு தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் விருவீட்டில் நடந்த முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:மத்திய பா.ஜ ., அரசிடம் இருந்து உரிமைகளை மீட்க தமிழக முதல்வர் போராடி வருகிறார். பா.ஜ., அரசை எதிர்க்கும் இந்தியாவில் துணிவுள்ள தலைவராக முதல்வர் இருக்கிறார்.நிலக்கோட்டை தொகுதி தி.மு.க.,வின் கோட்டையாக வேண்டும். தொகுதியை வென்றெடுக்க தி.மு.க., போராடும். தி.மு.க., வெல்லும் என உறுதி ஏற்போம் என்றார்.தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் தலைமை வகித்தார். நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் கம்பம் பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் முத்துப்பாண்டி, ஒன்றிய அமைப்பாளர் சத்ரியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை