மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் சோமவாரம்
19-Nov-2024
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
23-Oct-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சோமவாரத்தை யொட்டி நடந்த சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கார்த்திகை மாதத்தின் சோம வார நாளையொட்டி கலச பூஜை ,சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர் அபிராமி அம்மனுக்கு சங்கு சிவயாகம் நடைபெற்றது.மூலவர், நந்திக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.அதன்பின்பு சிவபெருமானுக்கு பஞ்சமுக அர்ச்சனை, மகா அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயில், ரவுண்ட்ரோடு புதுார் சக்தி சந்தான கணேசர் கோயில், காந்திஜி புதுரோடு ஆதி சிவன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் அழகாம்பிகை உடனுறை சிவகுருசாமி கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன.*கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு தீபாராதனைகளுக்குப்பின் 108 சங்குகளில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன் மூலவர், நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர்-, செண்பகவள்ளி அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உலக நன்மை வேண்டி வேத மந்திரங்கள் முழங்க சங்காபிஷேகம் நடந்தது.
19-Nov-2024
23-Oct-2024