விவசாயிகளுக்கு உதவ எம்.பி.,வேண்டுகோள்
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானுக்கு அனுப்பிய கடிதத்தில் விவசாயிகள் மாறுபட்ட காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒருங்கிணைந்த மேம்பாட்டு மிஷன் திட்டத்தின் கீழ் குளிர்பதன வசதிகள், மாம்பழ கூழ் உற்பத்தி அலகுகள் அமைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.இதுபோல் ரயில்வே கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.