உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேணுகோபால சுவாமி கோயிலில் முகூர்த்தக்கால்

வேணுகோபால சுவாமி கோயிலில் முகூர்த்தக்கால்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.பழநி காந்தி ரோட்டில் உள்ள இக்கோயிலில் பாலாலய பூஜை நடக்க புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று (நவ.4) கும்பாபிஷேகம் முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகம் நவ.17 அன்று நடத்த துறை ரீதியான அனுமதி கோரப்பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஸ்தபதி மூர்த்தி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !