உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முள்ளிப்பாடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

முள்ளிப்பாடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனுாத்து வரை 19.5 கி.மீ .,நீளத்துக்கு மாநில சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் எனக்கோரி விவசாய சங்கத்தினர், மார்க்சிஸ்ட் சார்பில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தெடங்கி உள்ளனர். மாநிலத்தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை