மேலும் செய்திகள்
உடல் உறுப்பு தான கூட்டம்
14-Aug-2025
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு முத்தமிழ் சங்கம் சார்பில் இலக்கியப் பாவரங்கம், வள்ளுவன் வகுத்த வாழ்வியல் கதைகள் எனும் தொகுப்பு பனுவல் நுால் வெளியீட்டு விழா, பட்டிமன்றம் நடந்தது. தமிழ்நாடு முத்தமிழ் சங்க தலைவர் பைம்பொழில் அருண்தாஸ் மணி தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி, தமிழ்த் துறை தலைவர் பாவை, நறுமுகை காயத்ரி பைம்பொழில் முன்னிலை வகித்தனர். இலக்கிய பாவரங்கிற்கு பாவலர் மலர்மன்னன் தலைமை வகித்தார். சரவணன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. தமிழ்நாடு முத்தமிழ் சங்க தலைமை நிர்வாக அதிகாரி கனற்கோவன் கருப்புச்சாமி ராஜா , நிர்வாக இயக்குனர் இளம் பாரதி ராஜதுரை ஒருங்கிணைத்தார்கள்.
14-Aug-2025