முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா
வேடசந்தூர்: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மரியாதை செலுத்தினர். வேடசந்தூர் ஆத்துமேட்டில் உருவப்படத்திற்கு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், வேடசந்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல். ஏ., க்கள் பரமசிவம், தென்னம்பட்டி பழனிச்சாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், நகர செயலாளர் பாபு சேட், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் பங்கேற்றனர்.காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வேடசந்தூர் மேற்கு வட்டாரத் தலைவர் சதீஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் பங்கேற்றனர். வடமதுரை : அகில இந்திய பார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ரஞ்சித் போஸ், தலைவர் ராஜா, இளைஞரணி செயலாளர் நேதாஜி மணி, நத்தம் தொகுதி செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் பங்கேற்றனர். சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டையில், தேவர் ெஜயந்தி விழா நடந்தது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் முன்னதாக சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம் சிறப்பு பூஜைகள் நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலர் பி.எஸ்.ஜெயராம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர். அன்னதானம் நடந்தது. சிலை அமைப்பாளர் சேகர், தேவர் பேரவை நகர தலைவர் கலைச்செல்வம் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.