உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நல்லபிச்சம்பட்டி சர்ச் விழா துவங்கியது

நல்லபிச்சம்பட்டி சர்ச் விழா துவங்கியது

செந்துறை : -நத்தம் அருகே செந்துறை- நல்லபிச்சம்பட்டி உத்திரியமாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட கொடி சூசையப்பர் சர்ச்சில் இருந்து நல்லபச்சம்பட்டி சர்ச்சுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கொடியேற்றபட்டது. விழாவில் தினமும் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. நேற்று மாலை புனித உத்திரியமாதா வேண்டுதல் பொங்கல் வைத்தல் ,இரவு புனித உத்திரியமாதா வேண்டுதல் தேர்பவனி நடந்தது. . இன்று மாலை பொதுபொங்கலை தொடர்ந்து திருப்பலி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி ,புனிதர்களின் 5 சப்பர தேர் பவனி இன்று இரவு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி