உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டி.ஆர்.ஜி., கால்பந்து கோப்பை நாமக்கல் அணி வெற்றி

டி.ஆர்.ஜி., கால்பந்து கோப்பை நாமக்கல் அணி வெற்றி

திண்டுக்கல்: டி.ஆர்.ஜி., கோப்பைக்கான மாநில அளவிலான ஜூனியர் கால்பந்து போட்டியில் திண்டுக்கல் அணியை வீழத்தி நாமக்கல் அணி வெற்றி பெற்றது.திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தமிழக கால்பந்து கழக முன்னாள் செயலர் டி.ஆர்.கோவிந்தராஜன் நினைவாக டி.ஆர்.ஜி., கோப்பைக்கான மாநில ஜூனியர் கால்பந்து போட்டிகள் ஜூன் 20 முதல் 22ம் தேதி வரை நடந்தது.நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் திண்டுக்கல் அணியை வீழத்தி நாமக்கல் அணி 0:1 என்ற கோல்கணக்கில் வென்றது. வெற்றிக்கான கோலை அபிஸ்ரீ அடித்தார். போட்டிகளை மேஜர் டோனர் சுந்தரராஜன் துவக்கி வைத்தார். தமிழக கால்பந்து கழக தலைவர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, கால்பந்து கழக துணைத்தலைவர்கள் சங்கரலிங்கம், ரெத்தினம், ரமேஷ்பட்டேல் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சரவணன் பரிசுகளை வழங்கினார். ஈசாக்கு நன்றி கூறினார்.3 நாட்கள் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட 19 மாவட்ட அணிகளில் இருந்து 3 பயிற்சியாளர்கள் இணைந்து தேர்வு செய்த 40 வீரர்கள் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 20 வீரர்கள் மேற்கு வங்கத்தில் ஜூலை 10 முதல் 31 வரை நடக்கும் டயர் - 1 ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் பங்கு பெற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ