மரங்கள் வளர்ப்பை லட்சியமாக்கிய இயற்கை ஆர்வலர்கள்
மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி சோலை காடுகளை உருவாக்குவதே தனது லட்சியம் என கொடைக்கானலை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குளுகுளு கொடைக்கானலுக்கு சோலை மரங்களை உருவாக்கி அழகு சேர்ப்பதை 25 ஆண்டுகளாக செய்பவர் சர்வதேச லயன்ஸ் 324 தமிழ்நாடு புதுச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் டி. பி. ரவீந்திரன். இயற்கையின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்ட இவர் துவக்கத்தில் தமிழக கவர்னர், கலெக்டர், அரசுதுறை உயர் அதிகாரிகளை விழாக்களில் பங்கேற்க செய்து சோலை மரங்களை நடுவதை கடைபிடித்தார். பின் வீடுகள்தோறும் குழந்தைகளின் பெயரில் மரக்கன்றுகளை நடவு செய்து கொடைக்கானலில் சோலை மரங்களை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார். லட்சக்கணக்கான மரங்கள் இவரது செயல்பாட்டால் உருவாகியது. சோலை மரம், பழக்கன்று, மூலிகை மரம் என லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்துள்ளார். தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட சுற்றுச்சூழல் தலைவராக பொறுப்பேற்ற பின் இதுவரை லட்சகணக்கான மரங்களை கொடைக்கானல் தவிர்த்து பிற மாவட்டங்களில் நடவு செய்தார். இவரது பெரு முயற்சியில் லயன்ஸ் குறுங்காடுகள் உருவாக்கியதன் பின்னணியில் தமிழக முதல்வர் சில மாதங்களிலே மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்கினார். பூமி செழிக்கும்
ரவிந்திரன், இயற்கை ஆர்வலர், கொடைக்கானல்: மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை தற்போது வாட்டர் கேன்களில் விலை கொடுத்து வாங்கும் போக்கு உள்ளது. இதேபோன்று எதிர்காலத்தில் மரங்களின்றி மக்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை முதுகில் சுமக்கும் நிலை வராமல் ஒவ்வொருவரும் இயற்கை மீது ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் பட்சத்தில் பூமி செழிக்கும், நீர் வளம் பெருகும், மழை பொழியும், ஆரோக்கியமான பூமி உருவாக மரங்கள் முக்கியமானது என்றார்.