பழநியில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் அக்.3ல் நவராத்திரி விழா காப்பு கட்டுதல் உடன் துவங்குகிறது. இன்று முதல் அக்.12வரை நவராத்திரி விழா நாட்களில் முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட உள்ளது. விழா நாட்களில் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. நவராத்திரி விழா நாட்களில் பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயிலில் நடக்கிறது. பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் நடக்க உள்ளது. அக்.12ல் முருகன் கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கும். மதியம் 3:00 மணிக்கு மேல் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலை அடையும். தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடக்கும். அம்பு போடுதல் நிகழ்வுக்கு பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்து, பராசக்தி வேல் முருகன் கோயில் அடைந்த பின் அர்த்தசாம பூஜை நடக்கிறது.