தொட்டியில் தண்ணீர் இருந்தும் சப்ளை செய்வதில் அலட்சியம்
டூவீலர்களால் நெரிசலில் பழநி அய்யம்புள்ளி ரோட்டில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுகிறது. பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரன், பழநி. -மழை பெய்தாலே நீர் தேக்கம் குஜிலியம்பாறை தாலுாகா தி. கூடலுார் ஊராட்சி கடைவீதியில் மழை பெய்தாலே தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஆக்கிரமிப்பு காரணமாக மழை நீர் வெளியேற முடியாது அப்படியே நிற்கிறது .இதனால் போக்குவரத்து பாதிக்கிறது .சண்முகம், தி. கூடலுார். அறுந்து தொங்கும் கேபிள் திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் இருந்து ஜி.டி .என். சாலை வழியில் கேபிள் ஒயர்கள் அறுந்து தொங்குதால் இரவில் நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ராஜா, திண்டுக்கல். கழிவுநீர் தேக்கத்தால் கொசு ஆத்துார் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சி ஜே.புதுக்கோட்டையில் சாக்கடை பராமரிப்பில் அலட்சியம் நீடிக்கிறது. அரசு பள்ளி அருகே கழிவுகள் மேவி சாக்கடைநீர் தேங்குவதால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. -சி.முருகன், ஜே.புதுக்கோட்டை. ...................----------- வராத குடிநீரால் அவதி வத்தலகுண்டு அருகே ரங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சி சேர்வாரம்பட்டி கிழக்கு தெருவில் குடிநீர் சரிவர வராததால் மக்கள் பாதிக்கின்றனர். மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் இருந்தும் எடுத்து விட மறுக்கின்றனர் . கார்த்திகேயன், சேர்வாரம்பட்டி. சேதமான மின் கம்பம் நிலக்கோட்டை பிள்ளையார்நத்தம் சிறுநாயக்கன்பட்டி தெற்கு தெருவில் மின் கம்பம் பூச்சுபெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. காற்று அடிப்பதால் சாய்வது போல் உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். க.ரதிஷ் பாண்டியன், பொம்மணம்பட்டி. அள்ளப்படாத குப்பை திண்டுக்கல் சீலப்பாடி கணேஷ் நகர் கோதாவரி தெருவில் ஒரு மாதமாக குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது. இதனால் ரோட்டில் நடக்க முடியாது சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை .சுஜித், சீலப்பாடி.