மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
24-Feb-2025
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் பேட்டரி பஸ் வழங்கப்பட்டது.பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக பேட்டரி கார், பேட்டரி பஸ்களை இயக்குகிறது. இதில் ஏறி பக்தர்கள் பயணிக்கின்றனர்.இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் எலக்ட்ரிக் பஸ்சை கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைத்தது. கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ் பெற்று கொண்டார்.
24-Feb-2025