உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்திகள் சில வரிகளில்.....

செய்திகள் சில வரிகளில்.....

அன்பு சோலைக்கு வரவேற்புதிண்டுக்கல்: மாவட்டத்தில் முதியோர் நலனுக்கென அன்புச்சோலை மையம் அமைத்திட 3 ஆண்டுகள் முதியோர் இல்லம் நடத்தி வரும் தன்னார்வ அரசு சாரா தொண்டு நிறுவனத்திடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. முதியோர்களுக்கென உரிய மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்க வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.திருநங்கைகள் சிறப்பு முகாம்திண்டுக்கல் : திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி , மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் ஜூலை 8 ல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.முதியோர்களுக்கான செயலிதிண்டுக்கல் : சமூக நலன் , மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்காக seniorcitizen.tnsocialwelfare என்ற அலைபேசி செயலி செயல்படுகிறது. தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது. அருகே உள்ள முதியோர் இல்லங்கள், உடற்பயற்சி, ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், குறைகள் தெரிவித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட அலைபேசி செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ