செய்திகள் சில வரிகளில்...
மலரஞ்சலி திண்டுக்கல் : மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் தியாகி வ.உ.சி., ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பிறந்ததினம் ,அன்னை தெரசாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. துணைத்தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் சஞ்சய்குமார், நிர்வாகிகள் டால்டன், கவுதமன், ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொருளாளர் முத்துக்குமார் செய்தார். நேர்காணலுக்கு அழைப்பு திண்டுக்கல்: மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு நேர்காணல் செப்.19 ம் தேதி நடக்கிறது. கிழக்கு கோவிந்தபுரத்தில் உள்ள திண்டுக்கல் தலைமை அலுவலகத்தில் தேர்வு நடைபெற உள்ளது என ஆவின் பொதுமேலாளர் வாணீஸ்வரி கூறினார். தலைவர்கள் தினம் அனுசரிப்பு திண்டுக்கல் ; திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில் வ.உ.சி., பிறந்ததினம், கோபால்நாயக்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் அருணகிரி, பொருளாளர் ஜெயசந்திரன் சிறப்புரையாற்றினார். செயலர் பத்மநாபன் நன்றி கூறினர். ஏற்பாடுகளை வைரவேல் செய்தார். தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் : மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் - நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை (செப். 8) நடக்கிறது. இம்முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8050 முதல் 12,000 வரை வழங்கப்படும். விவரங்களுக்கு மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451- 2970 049ல் அணுகலாம்.