உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீடுகளுக்குள் புகும் பாதாள சாக்கடை கழிவு திண்டுக்கல்லில் 15 நாளாகியும் நடவடிக்கை இல்லை

வீடுகளுக்குள் புகும் பாதாள சாக்கடை கழிவு திண்டுக்கல்லில் 15 நாளாகியும் நடவடிக்கை இல்லை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 15 நாளாகியும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.திண்டுக்கல் மாநகராட்சி அரசன் நகர் பகுதியில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக 15 நாட்களாக கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதோடு கழிப்பறை குழாய் வழியாக வீடுகளுக்குள்புகுந்து விடுகிறது. 15 நாட்களாக இதேநிலை நீடிப்பதால் மக்கள் தினமும் அவதியை அனுபவிக்கின்றனர். பாதாள சாக்கடை ஜங்ஷன் பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து கழிவுநீர் கால்வாயை துார் வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார் திண்டுக்கல் பா.ஜ., மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத்தலைவர் துரை கணேசன் .மேலும் இதை வார்டு கவுன்சிலரும் கண்டுகொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாவதற்குள் இப் பிரச்னையை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை