நீர் வழிந்தோட வடிகால் இல்லை; வாகன ஓட்டிகள் சிரமம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடுகள் அமைக்கும்போது போதிய வடிகால் அமைப்பதில்லை.இதனால் மழை நேரங்களில் மழைநீர் வழிந்தோட வழி இல்லாமல் ரோடுகளிலே தண்ணீர் தேங்குகிறது. வாகன ஓட்டிகள் மட்டுமன்றி பாதசாரிகளும் பாதிப்பினை சந்திக்கின்றனர்.இதோடு ரோடுகளில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.ரோடும் சேதமாகி மேலும் பள்ளங்கள் உருவாகின்றன. இது போன்ற ரோடுகளை கண்டறிந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதோடு போதிய வடிகால்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.