உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி பஸ் ஸ்டாண்டில் இல்லை வசதி

பழநி பஸ் ஸ்டாண்டில் இல்லை வசதி

பழநி: பழநி பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.பழநி பஸ் ஸ்டாண்டில் கிழக்கு புறமுள்ள வணிக வளாகம் புதிதாக கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்து கடந்த ஆகஸ்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்போது வரை பயணிகளுக்கான காத்திருப்பு இருக்கை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை தயாராக இல்லை. வளாகத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரம் ஆகி விடுகிறது. இரவு நேரங்களில் குடிகாரர்கள் மது அருந்த புதிய கட்டடத்தை பயன்படுத்துகின்றனர். பகலில் பயணிகள் அமரும் இருக்கை இல்லாததால் பல மணி நேரம் நின்று பஸ்களில் ஏறி செல்லும் நிலை ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி