உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தில் 8997 சமையலர் , உதவியாளர்களை மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்க அரசாணை வெளியிட்டுள்ளது.நீண்டகாலமாக சமையலர்களும், உதவியாளர்களும் ரூ.5 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வரும் நிலையில் ரூ. 3 ஆயிரம் சொற்ப தொகையை சம்பளமாக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டதை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் முருகவள்ளி,மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க பொருளாளர் ஜாபர் அலி,நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் மாநில தலைவர் முருகானந்தம்,நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில துணை த்தலைவர் ராஜமாணிக்கம்,அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ