உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்பு

உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்பு

பழநி: திருவள்ளுவர் சாலை உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பால் பழநி நகராட்சி 16வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.லட்சுமிபுரம், மெயின் ரோடு,செகண்ட் கிராஸ், பெரியார் சாலை, ராமலிங்கம் தெரு, லயன்ஸ் கிளப் ரோடு, திருவள்ளுவர் சாலை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். உழவர் சந்தை, மருத்துவமனை, கோயில்கள், வங்கிகள், எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கொண்டுள்ள இங்கு முக்கிய நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. திருவள்ளுவர் சாலை உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. உழவர் சந்தை அருகே தள்ளுவண்டி கடைகளில் அதிகாலை முதல் இரவு வரை காய்கறி, பழ வியாபார வண்டிகளில் ஸ்பீக்கர்கள் அலறுவதால் இப்பகுதியினர் மன உளைச்சலில் உள்ளனர். உழவர் சந்தை பகுதிகளில் வாகனங்களை நிறுத்த சரியான இடமும் இல்லை.

முடங்கிய பூங்கா

கிஷான், மாணவர், பெரியார் சாலை : திருவள்ளுவர் சாலை முக்கிய சாலையாக உள்ளது. உழவர் சந்தை அருகே உள்ள பூங்கா செயல்படாமல் பல நாட்களாக உள்ளது. இதனால் இங்குள்ள பொருட்கள் சேதமடைகின்றன. புதர் மண்டி உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதால் நாய் தொல்லை அதிகரிக்கிறது. பூங்காவை திறந்து பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

நடவடிக்கை இல்லை

கார்த்திகை செல்வி, குடும்பத் தலைவி, லயன்ஸ் கிளப் ரோடு : நகரின் மேம்பாட்டுக்காக பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும். ரோட்டில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால்களையும் அமைக்க வேண்டும்.இதோடு போலீசார் ரோந்து பணியையும் தீவிர படுத்த வேண்டும்.

சிரமப்படுகிறார்கள்

அருணா, இ சேவை மைய உரிமையாளர், லட்சுமிபுரம் : நாய் தொல்லை அதிகம் உள்ளது. இரவு நேரங்களில் நடந்து வர முடியவில்லை. குழந்தைகள் முதியவர்கள் தெருவில் நடந்தால் நாய் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது.இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

பள்ளியில் வகுப்பறை

மீனாட்சி தேவி, கவுன்சிலர் (தி.மு.க.,) : திருவள்ளுவர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சண்முகபுரம் பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் கட்டப்பட்டு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரோந்து பணியில் தீவிர படுத்த போலீசாரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நாய் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்க நகராட்சியில் பேசி வருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை