| ADDED : நவ 22, 2025 03:41 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் அரசு விழாக்களில் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. கொடைக்கானல் மலைப் பகுதியில் 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில், குளிர்பானம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்பவர், பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மலையடிவாரம், கொடைக்கானல் மலைப்பகுதி முழுமையும் பிளாஸ்டிக் பயன்பாடு, வாட்டர் பாட்டில் குறித்து சோதனை செய்யப்படுகிறது. ஆனால் கொடைக்கானலில் நடக்கும் அரசு விழாக்களில் 1 லிட்டர் முதல் அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. தனியார் மண்டபத்தில் நடந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் முன்னிலையில் தடை செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்கள் மேடையை அலங்கரித்தது. பொதுமக்களிடையே அதிகாரிகளுக்கு இதில் விலக்குண்டா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. கொடைக்கானலில் தடை என்பது பொதுவாக உள்ள நிலையில் விழாக்களில் தடை செய்யப் பட்ட பாட்டில் பயன்பாடு பாரபட்ச நிலையை காட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் தடை பாட்டில்கள் பயன்படுத்திய விழா அமைப்பாளர்கள் மீது அபராதம், நடவடிக்கை எடுக்க வேண்டும்.