உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ் மோதி ஒருவர் பலி; பெண்ணின் கால் முறிந்தது

பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ் மோதி ஒருவர் பலி; பெண்ணின் கால் முறிந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் முன்பாக இன்று (டிச.,4) காலை அரசு பஸ் ஒன்று பிரேக் பிடிக்காமல் சென்றுள்ளது. இதில் முன்னால் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நந்தகுமார் என்பவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஆனாலும் கட்டுக்கடங்காமல் சென்ற பஸ், சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் மீதும் மோதி சிறிது தூரம் சென்று நின்றது. இதில் அப்பெண்ணின் இரு கால்களும் முறிந்தன. சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S Sivakumar
டிச 04, 2024 15:26

இது மாதிரி நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மை நிலை என்ன என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலையீடு இல்லாமல் இது நிற்க போவது இல்லை.


Krishnamurthy Venkatesan
டிச 04, 2024 15:00

பிரேக் பிடிக்காத டப்பா பேருந்தை ஓட்டிய டிரைவர், ஓட்ட வைத்த டெப்போ மேனேஜர், அந்த டெப்போவின் TECHINICIAN அனைவைரையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.


முக்கிய வீடியோ