உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலக சேவைகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்

தொழிலக சேவைகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்

திண்டுக்கல் : திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் இணை இயக்குநர் புகழேந்தி அறிக்கை:திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ள தொழிற்சாலைகள், புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் தொழிலக பாதுகாப்பு , சுகாதார இயக்ககத்தின் மேம்படுத்தப்பட்ட https://dish.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தல், வரைபட ஒப்புதல், ஆண்டறிக்கைகள், ஒப்பந்த தொழிலாளர் பதிவுச்சான்று, உரிமம் புதுப்பித்தல், வெளிமாநில தொழிலாளர்கள் பதிவுச்சான்று, உரிமம் புதுப்பித்தல், அழுத்தக்கலன் சோதனை சான்று, மருத்துவப் பரிசோதனைச் சான்று போன்ற அனைத்து சேவைகளையும் பெற தொழிற்சாலை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இத்துறையின் அனைத்து சேவைகளையும் பெற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்துறை சார்ந்த சேவைகளுக்கான கட்டணங்கள் இ-செல்லான் மூலம் இணையதளம் வழியே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக பெறப்படும் தங்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு இணையதளம் மூலமாக ஒப்புதல் அளிக்கப்படும். தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்யும் போது சந்தேகம் ஏற்பட்டால் திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தை 0451 299 9481 ல் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ