உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இளன் ஹோம் ஸ்டோர் திறப்பு விழா

பழநியில் இளன் ஹோம் ஸ்டோர் திறப்பு விழா

பழநி: பழநி திண்டுக்கல் சாலையில் இளன் ஹோம் ஸ்டோர் திறப்பு விழா எஸ்.ஆர்.கே காம்ப்ளக்ஸ் வளாகத்தில் முதல் மாடியில் நடைபெற்றது.பழநி - திண்டுக்கல் சாலை நேதாஜி நகர் பகுதியில் எஸ்.ஆர்.கே., காம்ப்ளக்ஸ் வளாகத்தின் முதல் மாடியில் இளன் ஹோம் ஸ்டோர் திறப்பு விழாவில் எம்.எல்.ஏ, செந்தில்குமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இங்கே உயர்தர கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள், வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சமையல் அறைக்கு தேவையான முன்னணி நிறுவன குக்கர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ், ஓவன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழா சலுகையாக பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பொருள்களுக்கு அதிகபட்சம் 70 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச, தங்கம், வெள்ளி நாணயங்கள் பட்டுப்புடவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இளன் ஹோம் ஸ்டோர் நிறுவன சேர்மன் இளமாறன்ஜெகன், மாஸ்டர் இளன்ஆரன் ஆகியோர் வரவேற்றனர். நடிகை ரம்யாபாண்டியன், இளன்ஹோம்ஸ்டோர் இயக்குனர் பிரியதர்ஷினி, நடிகர் சித்தார்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மார்ட்டின் குரூப் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டைசன், எஸ்.ஆர்.கே நிறுவனர் சின்னசாமி, உடுமலை எஸ்.ஆர்.கே ஹோண்டா இயக்குனர்கள் கார்த்திக்சின்னசாமி, ரமேஷ் சின்னசாமி, பொது மேலாளர் முத்து, தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை