உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும்

எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும்

நிலக்கோட்டை:''நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும்'' என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அவர் கூறியதாவது: அடிப்படை உரிமைகளுக்காக போராடிய துாய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்தியதை கண்டிக்கிறேன். துாய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுத்தால் பணியாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். ஆணவக் கொலைகளை கண்டிக்கிறோம். இதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். நிலக்கோட்டை தொகுதியில் நான் போட்டியிடுகிறேனா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. எங்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை