உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளக்குகள் எரியாது பயணிப்போரை அச்சுறுத்தும் மேம்பாலம்

விளக்குகள் எரியாது பயணிப்போரை அச்சுறுத்தும் மேம்பாலம்

திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் பெரும்பாலும் எரியாது இருள் சூழந்து உள்ளது.முக்கியமான இந்த ரோடு வழியாகதான் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.பெண்கள் தனியாக டூவீலர்களிலும் செல்கின்றனர். இரவில் வரும் போது இருள் சூழ்ந்த இப்பாலத்தை கடக்கும்போது ஒரு வித அச்சத்துடனே பயணிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகமோ எதையும் கண்டுக்காது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்..............நடவடிக்கை எடுக்கப்படும்இது தொடர்பான புகார் எனது கவனத்திற்கு வந்துள்ளது. நாளை (இன்று )நேரில் ஆய்வு செய்து மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் அனைத்தும் எரிய நடவடிக்கை எடுக்கப்படும்.செந்தில் முருகன் ,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல் ........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை