உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் லீக் போட்டி பழநி டாமினேடர்ஸ் அணி வெற்றி

கிரிக்கெட் லீக் போட்டி பழநி டாமினேடர்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் பழநி டாமினேடர்ஸ் அணி வெற்றி பெற்றது.பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பழநி டாமினேடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது. விக்னேஷ் 62, கார்த்திகேயன் 30, கேசவன் 72 (நாட்அவுட்) ரன் , காளீஸ்வரன் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஏ.எம்., கிரிக்கெட் கிளப் அணி 43 ஓவர்களில் 211 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது. லஷ்மிநாராயணன் 37, முத்து காமாட்சி 31, சசிகுமார் 54 ரன் , விக்னேஷ், நடேசன், கார்த்திகேயன் தலா 3 விக்கெட் எடுத்தனர்.ஆர்.வி.எஸ்., மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பை முதல் டிவிஷனுக்கான மற்றொரு போட்டியில் திண்டுக்கல் ப்ளே பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 45 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. சசிகுமார் 36, ரோசன் 90 ரன்களும், அருண்குமார் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., கிரிக்கெட் கிளப் அணி 44.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆல் ஆவுட் ஆகி தோற்றது. உதயகுமார் 65, எமயவரம்பன் 39 ரன்களும், எவரெஸ்ட் 7 விக்கெட் எடுத்தார்.ரிச்மேன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பை, முதல் டிவிஷனுக்கான மற்றொரு போட்டியில் ஒட்டன்சத்திரம் நைக் கிரிக்கெட் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 30 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தருஷன் 40 ரன் , அபிேஷக் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா கிரிக்கெட் கிளப் அணி 27.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது அப்துல்லா 35 (நாட்அவுட்), பனபாண்டி 26 ரன் விக்னேஷ்வரன், சதீஸ்குமார் தலா 3 விக்கெட் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை