உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இறைச்சி கடைகளை முறைப்படுத்த பழநி நகராட்சி பரிசீலனை

இறைச்சி கடைகளை முறைப்படுத்த பழநி நகராட்சி பரிசீலனை

பழநி : பழநி நகர் பகுதிகளில் இறைச்சி கடைகள் அதிகரித்து வரும் நிலையில் இறைச்சி கழிவுகள், சாக்கடை யில் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு, நாய் தொல்லை காரணமாக அவற்றை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.பழநி நகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மீன், மாடு, ஆடு, கோழி, கருவாடு போன்ற இறைச்சிக் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல இறைச்சி கடைகளின் கோழி ,இறைச்சி கழிவுகள் சாக்கடை , குப்பையில் கொட்டப்படுகிறது. இதனால் நோய் தொற்று , சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை சாப்பிட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவ்வாறு சாப்பிடும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று நாய்களுக்கு ஏற்படுகிறது. நோய் தொற்று உடன் தெருக்களில் நாய்கள் சுற்றி திரிவதால் சுகாதாரக் கேடு அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் இறைச்சி கடைகளை முறைப்படுத்தி ஒருங்கிணைந்த இறைச்சிக்கடை மையத்தை புறநகர் பகுதியில் ஏற்படுத்த பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ