உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி பொருந்தலாறு அணை நீர் இன்று திறப்பு

 பழநி பொருந்தலாறு அணை நீர் இன்று திறப்பு

பழநி: பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று முதல் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறை அறிக்கை: பழநி அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பழைய ஆறு அணைக்கட்டு கால்வாய் வாயிலாக பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு இன்று முதல் நீர்திறக்கப்படுகிறது. தொடர்ந்து 70 நாட்களுக்கு 2026 மார்ச் 3ம்தேதிவரை நீர் திறக்கப்படவுள்ளது. இதனால், பழநி வட்டத்தில் உள்ள பெரியம்மாபட்டி, தாமரைகுளம், அ.கலையம்புத்துார், மானுார், கோரிக்கடவு, கீரனுார் கிராமங்களில் உள்ள 6,168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி