வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரயில் நிலையங்களில் புகை பிடிக்க கூடாது என்று சட்டமும் உத்தரவும் இருந்த போதிலும், பல ரயில் நிலையங்களில் பலரும் புகைக்கத்தான் செய்கிறார்கள். காவல் துறை வேடிக்கை பார்க்கிறது.
பழநி : பழநி ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு இறக்கும் பகுதி குடிகாரர்களால் மினி பாராக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர்.பழநி ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு இறக்கும் பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் தனியார் , அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான சரக்குகள் ஏற்றி இறக்கப்படுகிறது. ,தீவனங்கள் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் , பல்வேறு பொருட்கள் வெளி மாநிலம் ,வெளி மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் பழநி வந்து இறக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இப்பகுதி பிளாட்பார்மை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவது இல்லை .இதில் வாகனங்களில் வந்து செல்லும் வசதி உள்ளது .மாலை ,காலை நேரங்களில் இப்பகுதி மக்கள் இங்கு நடை பயிற்சிக்கு வந்து செல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் இப்பகுதியில் மாலை ,இரவு நேரத்தில் குடிமகன்கள் பாட்டில்களுடன் அமர்ந்து மினி பாராக மாற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு . பாதுகாப்பு குறைவு ஏற்படுகிறது. அச்சமும் அவதியும்
வைரமுத்து , பா.ம.க., மாவட்ட செயலாளர் ,பழநி: மதுவால் இளைஞர்களின் வாழ்க்கை வீணாகி வருகிறது. மது குடிப்பதற்கு பொது இடங்களை இளைஞர்கள் பயன்படுத்தி வருவது வருத்தம் அளிக்கிறது .இது மது அருந்துபவர்களுக்கு மட்டும் இல்லாமல் பொது இடங்களை பயன்படுத்தும் மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. பழநியில் ரயில்வே ஸ்டேஷனை சுற்றிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மது அருந்தி முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர் இதனால் அப்பகுதியில் வரும் பொது மக்கள் அச்சத்திற்கும் அவதிக்கும் உள்ளாகின்றனர். கண்டிக்க அச்சம்
நாகேஸ்வரன் , ரயில் உபயோகிப்பாளர் நல சங்க தலைவர் , பழநி: ரயிலில் வரும் சரக்கு இறக்கும் பகுதிகளில் அதிக அளவில் காலை நேரத்தில் மது பாட்டில்கள் கிடக்கின்றன. சில இடங்களில் உடைந்த பாட்டில்கள் உள்ளதால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காயம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ரயில்வே போலீசாரிடம் ,ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். பொதுமக்களும் மது அருந்தும் நபர்களை கண்டிக்க அச்சப்படுகின்றனர்தீர்வு: ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் மது குடிக்கும் நபர்களை கண்டறிய போலீசார் ரோந்து பணியை பணியை தீவிர படுத்த வேண்டும். ரயில்வே போலீசாரும் கண்காணிப்பை அதிகப்படுத்தினால் குடிகாரர்கள் தொல்லை குறையும். மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி அப்பகுதியில் குடிக்கும் பாராக பயன்படுத்தும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில் நிலையங்களில் புகை பிடிக்க கூடாது என்று சட்டமும் உத்தரவும் இருந்த போதிலும், பல ரயில் நிலையங்களில் பலரும் புகைக்கத்தான் செய்கிறார்கள். காவல் துறை வேடிக்கை பார்க்கிறது.