உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் வின்ச் சோதனை ஓட்டம்

பழநி கோயில் வின்ச் சோதனை ஓட்டம்

பழநி : பழநி முருகன் கோயில் செல்ல பக்தர்கள் பயன்படுத்தும் ஒரு பெட்டி மட்டும் இணைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.பழநி முருகன் கோயில் செல்ல பக்தர்கள் படிப்பாதை வின்ச், ரோப் கார் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மூன்று வின்ச் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் மூன்றாவது வின்ச் மேம்படுத்தப்பட்டு 72 நபர்கள் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் அடிக்கடி ரோப் மாற்றப்பட்டது. இதனை ஆய்வு செய்த பொறியாளர்கள் 72 பேர் பயணிக்கும் வின்ச் சேவையில் ஒரு பெட்டி மட்டும் வைத்து 36 பேர் பயணிக்கும் வகையில் இயக்க தீர்மானித்தனர். அதன் சோதனை ஓட்டம் மூன்றாவது வின்ச் பாதையில் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ